×

கோவையில் சிறுமி வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சென்னை: கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறுமியை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

Tags : Goa ,Marxist ,Chennai ,Marxist Communist Party ,
× RELATED மோடியோ, அமித்ஷாவோ காரணமில்லை பாஜவின்...