பழநி எஸ்ஐக்கு தங்கப்பதக்கம் தேசிய கிக்பாக்சிங்

பழநி, மார்ச் 3: .நெல்லை பகுதியில் ரவுடிகளை வாட்ஸ்அப் குரூப்பில் ஆடியோ உரையாடல் மூலம் மிரட்டி பிரபலமானவர் இசக்கிராஜா எஸ்ஐ. இவர் தற்போது பழநி தாலுகா ஸ்டேஷனில் எஸ்ஐயாக உள்ளார். இவர் கடந்த மாதம் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஐதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான கிக்பாக்சிங் போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டார். இதில் 85 முதல் 90 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்றார். தொடர்ந்து தங்கப்பதக்கம் பெற்றவர்களிடையே நடந்த சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன் பிரிவிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

வெற்றி பெற்ற எஸ்ஐ இசக்கிராஜாவிற்கு பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூகவலை தளங்கள் மூலமும், சக போலீசார் மூலம் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Related Stories:

>