ஒட்டன்சத்திரம் அருகே டூவீலர் கவிழ்ந்து 2 பேர் பலி

ஒட்டன்சத்திரம், மார்ச் 3: ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராசலிங்கம் (60). இவரது உறவினர் ராசன் (45). இருவரும் கடந்த 28ம் தேதி டூவீலரில் இடையகோட்டைக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டு இரவு ஊருக்கு திரும்பியுள்ளனர். கோமாளிபட்டி அருகே வந்தபோது டூவீலர் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ராசலிங்கம், ராசன் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இதுகுறித்து இடையகோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>