பழநி மாரியம்மன் கோயில் திருக்கல்யாணம் கோலாகலம் இன்று தேரோட்டம்

பழநி, மார்ச் 3: பழநி மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்த நிலையில், இன்று தேரோட்டம் நடக்கிறது.  

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் கிழக்கு ரதவீதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசித்திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்ாண்டு திருவிழா கடந்த 12ம் தேதி முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் துவங்கியது. திருக்கம்பம் சாட்டுதல் கடந்த 16ம் தேதி நடந்தது. கொடியேற்றம், பூவோடு வைத்தல் கடந்த 23ம் தேதி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு நடந்தது. இதையொட்டி இரவு 7 மணிக்கு மாரியம்மனுக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களின் குலவை கோஷம் மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை மாலை 4.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை கொடியிறக்குதலுடன் விழா முடிவடைகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பழநி கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி முருகேசன் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: