தமிழ்நாட்டில் மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேறு கடையில் பணி அமர்த்த உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேறு கடையில் பணி அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. மூடப்பட்ட கடை அருகே விற்பனை அதிகமாக உள்ள கடைகளில் பணி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள ஊழியர்களை காலி பணியிடங்கள் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணி அமர்த்தவும், இதன் பிறகும் பணியாளர்கள் மீதம் இருந்தால் டாஸ்மாக் கிடங்கிலும் பணியமர்த்தவும்,பணி மூப்பு அடிப்படையில் பட்டியல் தயார் செய்து வேறு கடைகளில் பணி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: