×

கண்ணந்தங்குடி மலையேரி அம்மன் கோயில் திருவிழா

 

ஒரத்தநாடு, மே 23: ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி மலையேரியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக  மாரியம்மன், மலையேறி அம்மன் வழிபாட்டு தலங்களில் பக்த கோடிகள் தங்களது நேர்த்தி கடனாக பால்குடம், காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். காவடி திருநாள் அன்று மலையேறி அம்மனை பூ அலங்காரம் செய்து தேரில் ஏற்றி ஊர் எங்கும் உலா வரும் நிகழ்ச்சியில் பக்தர்கள் ஆங்காங்கே உள்ள சாவடியில் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags : Kannanthangudi Malayeri Amman Temple Festival ,Orathanadu ,Mariamman ,Malayeri Amman ,Vaikasi festival… ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்