குடிநீர்கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்: ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

 

நாகப்பட்டினம், மே 23: பாப்பாகோயில் ஊராட்சி 8, 9வது வார்டு பகுதிகளை சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் நாகப்பட்டினம் -வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியலில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் அருகே பாப்பாகோயில் ஊராட்சிக்கு உட்பட்ட 8 மற்றும் 9வது வார்டுகளுக்கு குடிநீர் பல நாட்களாக சீராக வரவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள்
மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இதுவரை குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாப்பாகோயில் கிராம மக்கள் நேற்று நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச் சாலையில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: