வாகனம் மோதி வாலிபர் படுகாயம்

 

சின்னமனூர், மே 23: சின்னமனூர் அருகே குச்சனூர் துரைச்சாமிபுரம் கக்கன் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் மகன் சக்தி (29). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில் வழக்குப்பதிந்த சின்னமனூர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ தங்கபாண்டி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற சரக்கு வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: