ஆண்டிபட்டி, மே 23: தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதை அடுத்து, காற்றாலைகளில் மின்சார உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளான ஆண்டிபட்டி, கண்டமனூர், காமாட்சிபுரம், ஆத்தங்கரைப்பட்டி, கோவிந்தநகரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன.
