×

திருவாரூர் மாவட்டத்தில் புதிய சிங்கப்பெண் சிறப்பு படை 27ம்தேதி முதல் செயல்பட துவங்கும்

 

திருவாரூர், மே 23: திருவாரூர் மாவட்டத்தில் வரும் 27ந்தேதி முதல் சிங்கப்பெண் படை செயல்பட துவங்கும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக பதவி வகித்து வந்த கரூண்கரட் கடந்த 14ந்தேதி சென்னை ஒருங்கிணைந்த குற்ற உளவு பிரிவு எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் திருவண்ணாமலையில் ஏ.எஸ்.பியாக பணியாற்றி வந்த சதீஷ்குமார் பதவி உயர்வு மூலம் திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் சதீஷ்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, பொதுமக்களின் சிறிய சிறிய குறைகளை கூட களைய காவல்துறையினர் முயற்சி எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : Sinhapen Special Force ,Tiruvarur ,SP ,Sathishkumar ,Tiruvarur district ,Karunkarat ,Chennai Integrated Police Station ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்