சென்னை: சட்டமன்ற தேர்தலின் ேபாது, தவெக வேட்பாளரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில், திமுக எம்எல்ஏ சேகர்பாபு மீது போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது. இதில், சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட சினோரா அசோக், அன்று இரவு தனது ஆதரவாளர்களுடன் மண்ணடி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த முன்னாள் அமைச்சரும், துறைமுகம் சட்டமன்ற உறுப்பினருமான சேகர்பாபு, காரில் இருந்து இறங்கி, எதற்காக இங்கு கும்பலாக நிற்கிறீர்கள் என்று தவெக நிர்வாகிகளை ேகட்டுள்ளார்.
அதற்கு சினோரா அசோக் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சேர்ந்து, முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த சேகர்பாபு, அவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சினோரா அசோக், துறைமுகம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தார்.அதை தொடர்ந்து, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்தார். அதன் பேரில், சேகர்பாபு எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், அடித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் நடந்த தகராறு தொடர்பாக, தற்போது திமுக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுஅரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
