பெரியகுளம் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆய்வு

பெரியகுளம், மார்ச் 3: பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளை தேனி கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி ஆய்வு செய்தார். 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளை தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி பார்வையிட்டார். அப்போது பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது அவருடன் பெரியகுளம் சார் ஆட்சியர் சினேகா, வட்டாட்சியர் இளங்கோவன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் மோகன்குமார், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், வருவாய் ஆய்வாளர் முத்துப்பாண்டி, ஆகியோர் உடனிருந்தனர்.  பதற்றமான வாக்குச்சாவடிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசனை செய்தார்.

Related Stories:

>