கெங்குவார்பட்டியில் விவசாயிகளுக்கு மாணவிகள் பயிற்சி

பெரியகுளம், மார்ச் 3: கெங்குவார்பட்டியில் கிராம தங்கல் திட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

பெரியகுளம் அருகே வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் 4ம் ஆண்டு பயிலும் மாணவிகள் தர்ஷினி, ஜெயஸ்ரீ, சிவசங்கரி, ரெஜினா, தேவி, இசக்கியம்மாள் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் கெங்குவார்பட்டி கிராமத்தில் தங்கி விவசாயிகளுக்கு பயிற்சிகளை அளித்து வருகின்றனர். வீட்டு தோட்டம் அமைத்தல் பயிற்சியில் வெண்டை, அவரை, தட்டை, கீரை, கொத்தவரை உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் பயிரிடும் முறை மற்றும் பராமரித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பயிற்சிகளை விவசாயிகளுக்கு அளித்தனர். விவசாயிகள் முத்துராஜ், காமராஜ் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Related Stories:

>