பெரியகுளம் தொகுதியில் பறக்கும்படை தீவிர வாகன சோதனை

பெரியகுளம், மார்ச் 3: சட்டமன்ற தேர்தலையொட்டி பெரியகுளம் தொகுதியில் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெரியகுளம் சட்டமன்ற தொகுதியானது திண்டுக்கல் மாவட்ட எல்கையில் இருந்து துவங்குவதால் தேர்தல் பறக்கும் படையினர் தேனி மாவட்ட எல்கையான காட்ரோடு, வைகை அணை மற்றும் தேனி நகர் முழுவதும் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை ஒரு அணியும்,  2 மணி முதல் இரவு 10 மணிவரை ஒரு அணியும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒரு அணியும் என 3 குழுக்கள் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபடுகின்றன. இந்த குழுவில் மாவட்ட திட்ட அலுவலக அதிகாரி ஜோதி தலைமையில் 4 காவலர்கள் மற்றும் வீடியோ பதிவாளர் உள்ளனர். இவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>