நூலிழையில் உயிர் தப்பிய வியாபாரி

பெரியகுளம், மார்ச் 3: பெரியகுளம் அருகே மணல் லாரி மோதியதில் ஜவுளி வியாபாரி நூலிழையில் உயிர் தப்பினார். பெரியகுளம் அருகே வடுகபட்டியை சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி மாரிச்சாமி(38). இவர் நேற்று வடுகபட்டி கலையரங்கம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மணல் லாரி மாரிச்சாமி மீது மோதியது. கீழே விழுந்த அவர் டயரில் சிக்குவதற்குள் அங்கிருந்த மக்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனே லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாரிச்சாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>