×

QR.CODE” ஸ்கான் செய்தால் அதில் வரும் புகார் மனுவில் மக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் குறித்து புகார் அளிக்கலாம்: காமாட்சி!

 

சென்னை: பல்லாவரம் சட்டமன்ற தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ காமாட்சி பல்லாவரம் பகுதியில் வேலைக்கு செல்லும் மக்கள் நேரடியாக புகார் அளிக்க முடியாதவர்களின் வசதிக்காக “Q.R.CODE” அடங்கிய செயலியை அறிமுகபடுத்தினர். இதில் “QR.CODE” ஸ்கான் செய்தால் அதில் வரும் புகார் மனுவில் மக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் குறித்து புகார் அளிக்கலாம் என்றார் தற்போது 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளாதகவும் அவைகள் மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கபடும் என்று தெரிவித்தார்.

பின்பு பேட்டி அளித்த த.வெ.க பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி; இப்பொழுதான் ஆட்சி அமைந்துள்ளது. பல்லாவரம் சட்டமன்ற உட்பட்ட பகுதிகளில் சாலைகளை சீர் செய்வதற்கு சிறிது காலதாமதாகவும். முக்கியமாக இன்னும் ஆறுமாதங்களில் மழை காலம் என்பதால் அங்காங்கே கொட்டபட்டுள்ள குப்பை குவியல்கள் நிரந்திரமாக அகற்றபடும்.

மழை நீர் வடிகால் முழுவதுமாக கட்டி முடிக்கபடும், மழை நீர் தேங்கமால் இருப்பதை உறுதி செய்வதே என்னுடைய முக்கியமான நோக்கம், அதை நோக்கி தான் நாங்கள் பயணம் செய்து வருகிறோம். மேலும், பாதாள சாக்கடையில் தேங்கி உள்ள குப்பைகளால் தான் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி வருகிறது. அவைகளை முறையாக அகற்றி மூடி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.

 

Tags : Komadasi ,Chennai ,Pallavaram Assembly Constituency ,KAM. L. A KAMATSI ,
× RELATED திருவள்ளூரில் நெல் கொள்முதல்...