×

வண்ண வாக்காளர் அட்டை பெறலாம்

விருதுநகர், மார்ச் 3:  விருதுநகர் கலெக்டர் கண்ணன் வெளியிட்ட அறிவிப்பு: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் படிவங்கள் பெறப்பட்டன. ஆய்வு மற்றும் தகுதி அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.20ல் வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் வண்ண புகைப்பட அடையாள அட்டையை தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் இ.சேவை மையங்களில் ரூ.25 செலுத்தி பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்