×

ஓட்டு இயந்திரம் செயல் விளக்கம்

வத்திராயிருப்பு, மார்ச் 3: மின்னணு இயந்திரத்தில் ஓட்டு போடுவது எப்படி என வத்திராயிருப்பு வருவாய்த் துறை அலுவலகத்தில் செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் அன்னம்மாள் முன்னிலையில் பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாதிரி மின்னணு இயந்திரத்தில் ஓட்டு போட்டனர். நிகழ்ச்சியில் தேர்தல் மண்டல துணை வட்டாட்சியர் முனியாண்டி, வத்திராயிருப்பு வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணன், வைரமுத்து மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ