மேலப்பாவூர் குளத்தில் பனை விதைகள் விதைப்பு சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்

பாவூர்சத்திரம், மார்ச் 3:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேலப்பாவூர் குளத்தில் ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணியை மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராஜா, மாரி, தென்காசி நகர செயலாளர் சாதிர், ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, அழகுசுந்தரம், கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், மாவட்ட அணி நிர்வாகிகள் குட்டி, வேலுச்சாமி, சுப்பையா, பத்மநாதன், சுப்பிரமணியன், ராஜாமணி, சாமிதுரை, செல்வன், மாவட்ட பிரதிநிதி இளையபெருமாள், நிர்வாகிகள் ராமராஜ், நடராஜன், கபில், முருகன், மதிச்செல்வன், பூப்பாண்டியன், உதயசூரியன், அருணாசலம், குணம், ஜெயராமன், ராம்குமார், அருள்பாண்டி, சுடலை, காசி, ராஜ், டேனியல், மோகசுந்தரம், குமார், திருமலைபாண்டியன், தேன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>