மானூர் அருகே டாஸ்மாக் பாரில் பறக்கும் படை சோதனை

மானூர், மார்ச் 3: மானூர் அருகேயுள்ள எட்டாங்குளம் சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தேர்தல் சிறப்பு பறக்கும் படை அம்பை குடிமைப்பொருள் வழங்கும் தாசில்தார் பிரபாகரன் அருண்செல்வம் தலைமையில் அதிகாரிகள் எட்டாங்குளம் சாலையில் அரசு டாஸ்மாக் கடையில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள பாரில் 20 மதுபாட்டில்கள் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பாரில் மதுவிற்றதாக அருணாசலபுரத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் இசக்கித்துரை மீது மானூர் காவல் நிலையத்தில் தாசில்தார் பிரபாகரன் அருண்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ செய்யதுநிசார் அகமத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>