மாநில அளவிலான எறிபந்து போட்டி தென்காசி அணிக்கு பாராட்டு

சுரண்டை, மார்ச் 3: மாநில அளவிலான எறிபந்து போட்டியில் மூன்றாமிடம் பிடித்த தென்காசி அணி வீராங்கனைகள் பாராட்டப்பட்டனர்.

மாநில அளவிலான 18வது ஜூனியர் எறிபந்து போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 24 அணிகள் பங்கேற்றன. இதில் பெண்கள் பிரிவில் தென்காசி மாவட்ட அணி மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தது. வெற்றி பெற்ற வீராங்கனைகளையும், பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் சுரேஷ், தர்மராஜ் ஆகியோரையும் தமிழ்நாடு மாநில எறிபந்து கழக பொது செயலாளர் ஸ்டீபன் தங்கராஜ், வீரசிகாமணி விவேகானந்தா சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகியும் தென்காசி மாவட்ட எறிபந்து கழக தலைவர் பெலின்ஸ் மற்றும் பெற்றோர், பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories:

>