தஞ்சை மாவட்டத்தில் பம்புசெட் மூலம் குறுவை பயிர் சாகுபடிக்கான பணிகள் தீவிரம்

 

தஞ்சாவூர், மே 22: தஞ்சை மாவட்டத்தில் பம்புசெட் மூலம் குறுவை சாகுபடிக்கான பணிகள் தொடங்கி முழுமூச்சில் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் அடுத்த வேங்கராயன் குடிகாடு பகுதியில் குருவை சாகுபடிக்காக பாய் நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என விவசாயிகள் முப்போகம் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் குறுவை நடவு மே மாத இறுதியில் தொடங்கப்பட்டு, ஜூலை 31ம் தேதிக்குள் முடிப்பது வழக்கம். டெல்டா மாவட்டங்களில் பம்புசெட் மூலம் சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்துள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக குறுவை சாகுபடி பெரும்பாலும் பம்புசெட் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: