குருவிகுளத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கல்

திருவேங்கடம், மார்ச் 3: திருவேங்கடம் தாலுகா குருவிகுளத்தில் பிரமானந்த சந்தன சுவாமிகள் மடத்தில் சித்தர் லோகமாதா ஆலய அஷ்டபந்தன விழாவை முன்னிட்டு குருவிகுளம் அரசு சித்த மருத்துவமனை சார்பில் பங்கேற்ற சுமார் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் ரிஷிகேஸ் சுவாமி ஆதிஸ்வரன் பாபாஜி பங்கேற்று சித்த வைத்தியம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். குருவிகுளம் சித்த மருத்துவமனை மருத்துவர் செல்வராணி, மருந்தாளுனர் முருகேஸ்வரி மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>