×

கைலாசநாதர் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்: 29ம் தேதி தேரோட்டம்

 

நத்தம், மே 22: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேற்கு பார்த்த சிவாலயங்களில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று நத்தம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்பிகா சமேத கைலாச நாதர் கோயில் ஆகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இந்த ஆண்டு இத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மேளதாளம் முழங்க சுவாமிகள் உருவம் பொறித்த கொடி அங்குள்ள மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் மூலவர் கைலாசநாதர், செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடந்தது.

Tags : Kailasanathar Temple Vaikasi Visakha Festival ,Natham ,Natham Kovilpatti ,Senbhagavalli Ambika Sametha Kailasanathar Temple ,Natham Kovilpatti… ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்