நீடாமங்கலம், மே 22: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய பாஜ ஒன்றிய அரசை கண்டித்து நேற்று இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் சிபிஐ ஒன்றிய செயலாளர் சிவானந்தம், சிபிஎம் ஒன்றிய செயலாளர் கோபிராஜ் தலைமையில் கொரடாச்சேரி வெட்டாற்று பாலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் கேசவராஜ், மாவட்ட செயற்குழு சேகர், பன்னீர் செல்வம், சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செல்வம், ஈவேரா மற்றும் இடது சாரிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
