திருவாரூர், மே 22: திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் விளமல் ஆர்.வி.எல் நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது அவ்வப்போது சிறிய மற்றும் மாபெரும் அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (22ம் தேதி) காலை 9 மணி முதல் 2 மணி வரையில் மேற்படி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
