×

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாபநாசம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

 

தஞ்சாவூர், மே 22: பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 81 பேர் எழுதினர். இதில் 80 பேர் தேர்ச்சி பெற்ற 99 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். ஹரிஹரன் 428 மதிப்பெண் பெற்று முதலிடமும், கோகுல கிருஷ்ணன் 426 மதிப்பெண் பெற்று 2ம் இடமும், முகமது தவுபிக் 422 மதிப்பெண் பெற்று 3ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : Papanasam Government School ,Thanjavur ,Papanasam Government Boys Higher Secondary School ,Papanasam Government Boys Higher Secondary School.… ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்