×

மஞ்சூர் அருகே காமராஜ் நகர் பட்டத்தரசியம்மன் கோயில் திருவிழா

 

மஞ்சூர்,மே22: காமராஜ் நகர் பட்டத்தரசியம்மன் கோயில் திருவிழா கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள அன்னமலை காமராஜ் நகரில் பட்டத்தரசியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் வருடாந்திர திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றம், கணபதி பூஜை, முனீஸ்வரர் பூஜைகளுடன் துவங்கியது.  தொடர்ந்து அம்மன் பூச்சாட்டு, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அம்மன் அழைப்பு மற்றும் கரக ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தீச்சட்டி மற்றும் முளைப்பாரிகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர்.

Tags : Kamaraj Nagar Pattaarashyamman Temple Festival ,Manjoor ,Pattaarashyamman Temple ,Annamalai Kamaraj Nagar ,Nilgiris district ,Ganapati Puja ,Muneeswarar… ,
× RELATED நெல்லியங்காடு மாரியம்மன் கோயில்...