இயற்கை தூரிகையில் பிறந்த உயிரோவியம் சாலையோர காய்கறி விற்பனை ‘படுஜோர்’

 

ஊட்டி, மே 22: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் சாலையோர காய்கறி வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.  கோடை காலங்களில் குளு குளு சீசனை அனுபவிக்க ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பது வாடிக்கையாக உள்ளது. கோடை சீசனையொட்டி தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஊட்டி மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகளில், சுற்றுலா பயணிகளை நம்பியே சிலர் கடைகளை விரித்துள்ளனர்.

இவர்கள், தங்களது வீட்டுத் தோட்டங்களில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், கீரை வகைகள் உட்பட பல்வேறு காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த காய்கறிகளை கண்டவுடன் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி வாங்கிச் செல்கின்றனர். மார்க்கெட் மற்றும் நகருக்குள் வந்தால், வாகன நெரிசல் ஏற்படும் என்பதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சாலையோர கடைகளில் வாகனங்களை நிறுத்தி, அப்படியே காய்கறிகளை வாங்கி வாகனங்களில் போட்டுக் கொண்டு பறந்து விடுகின்றனர்.

Related Stories: