புதுவையில் புதிதாக 29 பேருக்கு கொரோனா

புதுச்சேரி, மார்ச் 3: புதுச்சேரியில் நேற்று புதிதாக 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 1,485 பேருக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 8, காரைக்கால்- 4, மாகே- 9 பேர் என மொத்தம் 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. நேற்று, உயிரிழப்பும் இல்லை. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 39,763 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 25 பேரும், இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 36 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 174 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று, 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவ பணியாளர்கள் 9,668 பேர், முன்களப் பணியாளர்கள் 1033 பேர், பொதுமக்கள் 36 பேர் என மொத்தம் 10,737 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>