போத்தீஸில் வாடிக்கையாளர்களுக்கு விழாக்கால பரிசு போட்டி

புதுச்சேரி, மார்ச் 3: புதுச்சேரி போத்தீஸ், தனது 10ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பரிசுப்போட்டிகளை நடத்தி வருகிறது. ஐந்து தளங்களுடன் செயல்படும் புதுவை போத்தீஸ், மளிகைப்பொருட்கள் மற்றும் காய்கறி பழங்கள் பிரிவில் அனைத்து பொருட்களும் அதன் விற்பனை விலையை விட மிகக் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.  அதேபோல் போத்தீஸ் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி போத்தீஸ் சார்பில் விழாக்கால பரிசுப்போட்டிகளை அறிவித்தது. இதில் பங்கு பெற்று  வெற்றிப் பெற்ற 300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 4 ஹீரோ ப்ளாஷ் எலக்டிரிக் பைக், மொபைல் போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான பரிசுப்பொருட்கள்

வழங்கப்பட்டது.

ஐடெக்ஸ் பிராண்டட் சார்பில், ஸ்மார்ட் டிவி,   இன்டக்சன் ஸ்டவ், கிரைண்டர் உள்ளிட்ட பரிசுகளும் , காலா பிராண்டட் சார்பில், ஸ்மார்ட் டிவி, ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பரிசுகளும், ஷாய் டீ பிராண்டட் சார்பில்,  ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜ் என பல்வேறு பரிசுகளும், இதயா டீ பிராண்டட் சார்பில்,  பிரிட்ஜ், மைக்ரோவோவன் உள்ளிட்ட  பரிசுகளும், பார்க் அவென்யூ பிராண்டட் சார்பில்,   தலா 2 எலக்ட்டிரிக் பைக், ப்ளாஷ் பிராண்டட் சார்பில்,  தலா 2  எலக்ட்டிரிக் பைக்,  ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜ் என பல்வேறு பரிசுகளும், தில்லைஸ் மசாலா பிராண்டட் சார்பில், பிரிட்ஜ், மைக்ரோவோவன்,  உள்ளிட்ட பரிசுகளும், காமசூத்ரா பிராண்டட் சார்பில், லேப்டாப், மொபைல் போன் என பல்வேறு பரிசுகள் போத்தீஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. போட்டிகளில் பங்கு பெற்று வெற்றிப் பெற்றவர்களுக்கு போத்தீஸ் பொதுமேலாளர்  அருண்மொழி வாழ்த்து தெரிவித்தார்.  போத்தீஸ் சூப்பர் ஸ்டோர் சார்பில் நடைபெறும்  விழாக்கால போட்டிகளிலும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் பங்கு பெற்று  பரிசுகளை பெற வேண்டும் என போத்தீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

>