குடியாத்தம் தொகுதியில் வாக்கு சேகரிக்க வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும்: கட்சியினருக்கு ஆர்டிஓ உத்தரவு

குடியாத்தம், மார்ச் 3: குடியாத்தம் தொகுதியில் வாக்கு சேகரிக்க வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என கட்சியினருக்கு ஆர்டிஓ உத்தரவிட்டார். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி குடியாத்தம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் சப்-கலெக்டர் ஷேக்மன்சூர் தலைமையில் நடந்தது. குடியாத்தம் தொகுதிக்கு உட்பட்ட திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சப்-கலெக்டர் பேசுகையில், குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட 3 இடங்களில் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கப்படும். வாக்கு சேகரிக்கும்போது வாக்காளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் 290 வாக்குச்சாவடிகள் இருந்தது. தற்போது 1,005 வாக்குகளுக்கு ஒரு வாக்குச்சாவடி என கூடுதலாக 408 வாக்குச்சாவடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 28 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பறக்கும் படை 2 குழுக்களாக தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது’ என்றார். கூட்டத்தில் உதவி தேர்தல் அலுவலர் கோபி, சத்தியமூர்த்தி, தாசில்தார் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: