பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 5 சட்டப்பேரவை தொகுதிக்கு தலா 10 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் அனுப்பி வைத்தார்

வேலூர், மார்ச் 3: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தலா 10 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று அனுப்பி வைத்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில் பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் அவர்களின் தயக்கத்தை ேபாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்னணு இயந்திரங்கள் மூலம் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கு தலா 10 இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் பங்கேற்று அனைத்து கட்சியினர் முன்னிலையில் 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைத்தார். இந்த இயந்திரங்கள் மூலம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஆனால் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) கணேசன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுணஐயப்பதுரை, தாசில்தார்கள் ராம், பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories:

>