கும்பகோணம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினருக்கு பயிற்சி முகாம்

கும்பகோணம், மார்ச் 3: கும்பகோணம் தாலுகா அலுவலகத்தில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கும்பகோணம் தாலுகா அலுவலகத்தில் கும்பகோணம் சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் தேர்தல் துணை தாசில்தார் விமல் தேர்தல் நடத்தை விதி மீறப்படும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூறினார். மண்டல துணை தாசில்தார் பாக்கியராஜ் மற்றும் பூவந்தி நாதன் ஆகியோர் தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசாரத்தின் போது கவனிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினர்.

Related Stories:

>