மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் மத்திய துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு

புதுக்கோட்டை, மார்ச் 3: புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் மத்திய துணை ராணுவ படையினருடன் ஒருங்கிணைந்து தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு நடந்தது. புதுக்கோட்டையில் காவல் துறையினர், மத்திய துணை ராணுவ படையினருடன் ஒருங்கிணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். அதில் பொதுமக்கள் தேர்தலின்போது அச்சமின்றியும், சுதந்திரமாகவும் வாக்களிக்க பாதுகாப்பான சூழல் உள்ளது” என்ற நிலையை விளக்கவும், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப்படுத்தவும் நடத்தப்பட்ட கொடி அணிவகுப்பை கலெக்டர் உமா மகேஸ்வரி, எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த கொடி அணிவகுப்பு நீதிமன்ற வளாகத்தில் ஆரம்பித்து கீழ ராஜவீதி, பழனியப்பா முக்கம் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்து ஆயுதப்படை திருமண மண்டபத்தில் முடிந்தது.

Related Stories:

>