×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 25,616 பேர்

புதுக்கோட்டை, மார்ச் 3: புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 25,616 பேர் உள்ளனர். இவர்கள் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்த்ல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் தாபல் வாக்கு என்பது இருந்து வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போலீசார் ஆகியோர் தாபால் வாக்குகள் அளிப்பது வழக்கம்.

தேர்தல் நடைபெறும் 2 நாட்களுக்கு முன்பாக அதற்கான படிவத்தை தேர்தல் ஆணையத்திடம் பெற்று அவர்கள் விரும்பும் சின்னத்தில் வாக்களித்து அதை மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் கொடுப்பார்கள். அவர்கள் அந்த தபால் வாக்குகளை தொகுதி வாரியாக பிரித்து வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைப்பர். இந்நிலையில் தற்போது கொரோனா காலம் என்பதால் தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் யாரெல்லாம் 80 வயதுக்கு மேல் உள்ளார்கள் என்று கணக்கெடுக்கும் பணி முடிந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை, கந்தவர்வகோட்டை, புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 25,616 பேர் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் வரும் தேர்தலில் விருப்பத்தின் பேரில் தபால் வாக்குகள் அளிக்கவுள்ளனர். இதுகுறித்து அலுவலர்கள் கூறியதாவது: இதுவரை இல்லாத வகையில் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்குகள் அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 25,616 பேர் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் செய்து வேட்பாளர்கள் இறுதி செய்த பிறகு தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சீட்டு தயார் செய்து அதற்கான படிவம் வழங்கப்படும். அவர்கள் பூர்த்தி செய்து உரிய அலுவலர்களிடம் அளிப்பர். அதை தேர்தல் அலுவலர்கள் பத்திரமாக பாதுகாத்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்வார்கள். இந்த முறை தேர்தலில் முறையாக கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது என்றனர்.

Tags : Pudukkottai district ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...