அறந்தாங்கி தொகுதியில் 6 கண்காணிப்பு குழு அதிகாரிகள் 24 மணி நேரமும் வாகன சோதனை

அறந்தாங்கி, மார்ச் 3: அறந்தாங்கி தொகுதியில் சட்டமன்ற தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்கள் வழங்குவதற்காக விதிகளை மீறி யாரும் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 6 கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடக்கிறது.இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்து வருகிறது.

இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வழங்கி வாக்கு சேகரிக்க ஒரு சிலர் முயற்சி மேற்கொள்வர். அவ்வாறு அவர்கள் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்களை கொண்டு செல்கிறார்களாக என தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அறந்தாங்கி தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாகனங்களில் கடத்தி செல்லப்படுகிறதா என்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்ய அறந்தாங்கி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அறந்தாங்கி சப் கலெக்டருமான ஆனந்த்மோகன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அறந்தாங்கி தொகுதியில் 6 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் 3 ஷிப்டுகளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Related Stories:

>