சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி

இடைப்பாடி, மார்ச் 3: சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் ஓமலூர் சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் நடத்த பயிற்சிக்கு அலுவலர் தனலிங்கம் தலைமை வகித்தார். வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் முறைகள், கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து எடுத்துரைத்தார். இதில் தாசில்தார் முத்துராஜா, தனி தாசில்தார் பிரகாஷ், வட்ட வழங்கல் அலுவலர் கோமதி, துணை தாசில்தார் ரமேஷ் ராஜமாணிக்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஓமலூர்: ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் 402 வாக்குச்சாவடிகள் உள்ளன. தேர்தல்  பணிக்காக 41 மண்டல அலுவலர்கள், துணை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 20 மண்டல அலுவலர்கள் 20 துணை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்  நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாபிரியா  பயிற்சி அளித்தார். கொரோனா காலம் என்பதால் தபால் வாக்குகள்  குறித்தும், யார் யாருக்கு தபால் வாக்குகள், 80 வயதிற்கு  மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் கொடுப்பது எப்படி, அதற்கான பணிகள் என்ன  என்பது குறித்து விளக்கினார். தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்வது, மீண்டும்  கொண்டு வருவது, இயந்திரத்தில் வாக்களிப்பது, தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து  அலுவலர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என ஆலோசனைகளை  வழங்கினார். முகாமில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அருள் பிரகாஷ், அன்னபூரணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: