பஸ் ஸ்டாண்ட் கடைக்காரர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகை

வாழப்பாடி, மார்ச் 3: வாழப்பாடியில், பஸ் ஸ்டாண்ட் கடைக்காரர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக கட்டிடங்கள் வாழப்பாடி பேரூராட்சி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பேருந்து நிலையத்தை இடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறி கடை நடத்தி வருபவர்கள் நேற்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், வாழப்பாடி போலீசார் விரைந்து சென்று சமரசப்படுத்தினர். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு

ஏற்பட்டது.

Related Stories:

>