வழிப்பறி வழக்கில் 10 ஆண்டுக்கு பின்பு கொள்ளையன் கைது

காடையாம்பட்டி, மார்ச் 3:கேரள மாநிலம் பெரிய நல்லூர் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் மகன் ஜாபர்(42). லாரி டிரைவரான இவர், கடந்த 11.5.2009ம் தேதி கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு லாரியில் லோடு ஏற்றி சென்றார்  அப்போது, சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பூசாரிபட்டி பகுதியில் வந்தபோது, 3 பேர் லாரியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கதிர்வேல் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சேலம் அம்மாபேட்டை பகுதிசை் சேர்ந்த முஸ்தபா மகன் மஸ்தானஅலி(40) என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் தொடர்புடைய மஸ்தான் அலியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து தீவட்டிப்பட்டி  போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். அப்போது, மேட்டுப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த மஸ்தான் அலியை பத்தாண்டுக்கு பின்பு கைது செய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related Stories: