மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி

காடையாம்பட்டி, மார்ச் 3:  காடையாம்பட்டி அடுத்த சந்தைப்பேட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது.

இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 42 அணிகள் பங்கேற்றன. பகல் இரவு ஆட்டமாக போட்டிகள் நடந்தது. கொங்குபட்டி அணியை எதிர்த்து நாரணம்பாளையம் இறுதிப்போட்டியில் விளையாடின. இதில் 18க்கு 24 என்ற புள்ளி கணக்கில் நாரணம்பாளையம் அணியை வீழ்த்தி கொங்குபட்டி அணி முதல் பரிசை வென்றது. இரணடாமிடத்தை நாரணம்பாளையம் அணியும், சந்தைப்பேட்டை அணி 3ம் இடத்தையும் பெற்றது. இந்த அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

Related Stories:

>