பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

நாமக்கல், மார்ச் 3: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சட்டமன்ற தேர்தலையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு குறும்பட ஒளிபரப்பை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேற்று துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: சட்டமன்ற தேர்தலில், 100 சதவீதம் வாக்களிப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையத்தின் மூலம் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. வாக்காளராக பெயரை பதிவு செய்ய, திருத்தங்கள் மேற்கொள்ள, ஒரே வாக்காளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தனது பெயரை பதிவு செய்திருந்தால், கணினி உதவியுடன் எளிதில் அவரது விவரங்களை கண்டறியவும், அதன்மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை பொறுப்புள்ள குடிமகனாக வாக்காளர்கள் நீக்க வேண்டும் என ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பான குறும்படங்கள் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள  6 சட்டமன்ற தொகுதிகள் முழுவதும் ஒளிபரப்ப செய்யப்பட உள்ளது. என கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலக தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள மீடியா  சென்டரை கலெக்டர் திறந்து வைத்தார். அப்போது டிஆர்ஓ துர்காமூர்த்தி, பிஆர்ஓ சீனிவாசன், ஏபிஆர்ஓக்கள் சரண், கோகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: