சமையல் காண்டிராக்டரிடம் ₹1 லட்சம் பறிமுதல்

பள்ளிபாளையம், மார்ச் 3: குமாரபாளையம் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி அசோக்குமார் தலைமையில் நேற்று மதியம் நெட்டவேலாம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது பல்லக்காபாளையம் சுப்பிரமணியம் நகரை சேர்ந்த சமையல் காண்டிராக்டர் பாலன், டூவீலரில் வந்தார். அவரை நிறுத்தி குழுவினர் சோதனையிட்டனர். அப்போது பையில், ₹1.07 லட்சம் இருந்தது.அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், பறிமுதல் செய்த அதிகாரிகள் குமாரபாளையம் தேர்தல் அதிகாரி தங்கத்திடம் ஒப்படைத்தனர். விசாரணை மேற்கொண்ட அலுவலர் தங்கம், உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுச்செல்ல அறிவுறுத்தினர். இதை தொடர்ந்த திருச்செங்கோடு அரசு கருவூலத்திற்கு பணத்தை அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>