×

அரிசி வியாபாரியிடம் ₹1.24 லட்சம் பறிமுதல்

சேந்தமங்கலம், மார்ச் 3: புதுச்சத்திரம் அருகே, சேலம் அரிசி வியாபாரியிடம், ₹1.24 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வாகனங்களில் ₹50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்துள்ள முனுசாவடி, அவுடியப்பன் கோயில் அருகே தோட்டக்கலைத்துறை அலுவலர் ராஜவேல் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் நேற்று காலை ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த மினி ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் வந்தவர்களிடம் ₹1லட்சத்து 24 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில், வாகனத்தில் வந்தவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்த சிலம்பரசன்(26) என்பது தெரியவந்தது. மேலும் சிலம்பரசன் ராமநாதபுரத்திற்கு அரிசி வியாபாரத்திற்காக சென்றுவிட்டு வந்தபோது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். தொடர்ந்து அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறையான ஆவணங்களை கொண்டு வந்து சமர்பித்த பின்னர் பணம் அளிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags :
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா