8ம் தேதி ஸ்டாலின் நாமக்கல் வருகை

திருச்செங்கோடு, மார்ச் 3: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், திருச்செங்கோடு மாவட்ட அலுவலகத்தில் அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நடந்தது.தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யுவராஜ், செழியன், பொருளாளர் குமார்,மொழிப்போர் தியாகி பரமானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட  செயலாளரும் பரமத்தி வேலூர் எம்எல்ஏவுமான கே.எஸ். மூர்த்தி தீர்மானங்களை விளக்கி பேசினார்.அதில், வருகிற 8ம் நாமக்கல்லில் நடைபெறும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு நகர, ஒன்றிய பேரூர் நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள, துணை அமைப்பாளர்கள் தவறாமல் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் அம்பிகாபாண்டியன், அன்பழகன், ஒன்றிய செயலாளா–்கள் வட்டூர் தங்கவேல், கபிலர்மலை சண்முகம்,மல்லைபழனிவேல், கருணாநிதி,எலச்சிபாளையம் தங்கவேல், குமரமங்கலம் செல்வராஜ், தனராசு, நகர செயலாளர்கள் தாண்டவன் கார்த்தி,ரவிச்சந்திரன், குமாரபாளையம் பொறுப்பாளர் செல்வம் ,பேரூர்  செயலாளா–்கள் மணிமாரப்பன், ரமேஷ்பாபு, கதிர்வேல், திருமலை, கருணாநிதி, மகாமுனி,  ராமலிங்கம், கார்த்திராஜா, சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் மதுரா செந்தில், ஜிஜேந்திரன், கிரிசங்கா்,பூங்கோதை செல்லதுரை, சரவணமுருகன், மொளசி ராஜமாணிக்கம், தனகரன், கிரிசங்கர், ஊராட்சி ஒன்றியக்குழு துணைதலைவர் ராஜபாண்டி ராஜவேலு, ஊராட்சி தலைவர்கள் தாமரைச் செல்வன், அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் நன்றி  கூறினார்.   

Related Stories:

>