மது விலக்கு போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் விடுதலை

ராசிபுரம், மார்ச் 3: மது ஒழிப்பு போராளி சசிபெருமாள், மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு இறந்ததையொட்டி தமிழகம் முழுவதும் அறப்போட்டம் நடந்தது. அப்போது ராசிபுரம் நகரத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தின்போது மதிமுக, தேமுதிக, சிபிஎம், விசிக, மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த 45 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த 5 ஆண்டு காலம் வரை நடைபெற்று வழக்கில்,நேற்று அனைத்து கட்சியை சேர்ந்த மதிமுக ஜோதிபாசு, விசிக மாதேஸ்வரன் உள்ளிட்ட 45 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Stories:

>