விவசாயியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

சேந்தமங்கலம், மார்ச் 3: நாமக்கல் போதுப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர். தமிழ்ச்செல்வன் (40). பந்தல் அமைப்பாளர். அதே பகுதியை சேர்ந்த தனது 10 நண்பர்களுடன் வேனில் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில் வேனை நிறுத்திவிட்டு நண்பர்களுடன் பாடலுக்கு நடனமாடி ஆரவாரம் செய்தார். இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த விவசாயி சின்னுசாமி (54), இரவு நேரத்தில் வீட்டின் அருகில் இதுபோன்று ஆரவாரம் செய்யக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது தமிழ்ச்செல்வனின் நண்பர்கள் வினோத் (35),சங்கர் (36) இருவரும் சேர்ந்து சின்னுசாமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த சின்னுசாமி நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீஸ் எஸ்ஐ சந்திரன் வழக்கு பதிவு செய்து வினோத்,சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories:

>