கர்நாடக விவசாயிடம் ₹1.18 லட்சம் பறிமுதல்

ஓசூர், மார்ச் 3: ஓசூர் அருகே ஆவணங்கள் இன்றி விவசாயி எடுத்து சென்ற ₹1.18 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து, ஓசூர் அருகே உள்ள பூனபள்ளி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். நேற்று கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியிலுள்ள சின்னஆகடே கிராமத்தை சேர்ந்த விவசாயியான ஆனந்த் (51) என்பவர், பசுமை குடில் அமைக்க பொருட்கள் வாங்குவதற்காக ஓசூருக்கு டூவீலரில் வந்தார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரி நஞ்சாரெட்டி தலைமையிலான பறக்கும் படையினர் அவர் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ₹1 லட்சத்து 18 ஆயிரத்து 600ஐ பறிமுதல் செய்து, ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories:

>