9 மாத குழந்தை திடீர் சாவு

கிருஷ்ணகிரி, மார்ச் 3: ராயக்கோட்டை அருகே 9 மாத குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராயக்கோட்டை அடுத்த சிங்காரப்பேட்டையைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவரது மனைவி அபிநயா. இவர்களது 9 மாத குழந்தை ஜெய்கிருஷ்ணனுக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக குழந்தையை  ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.  இதுகுறித்து, ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories:

>