×

கிரானைட் கம்பெனி ஊழியர் சாவு

கிருஷ்ணகிரி, மார்ச் 3: ராஜஸ்தான் மாநிலம் சர்வா கிராமத்தை சேர்ந்தவர் பாகுராம் (25). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள விட்டோபனப்பள்ளியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள கிரானைட் கம்பெனியில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகுராமிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதற்காக பெங்களூரு, கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது திடீரென மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பர்கூர் எஸ்ஐ மும்தாஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Granite Company ,
× RELATED கிரானைட் கம்பெனியில் கல் விழுந்து அசாம் தொழிலாளி பலி